கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
போலி ஆவணங்களை தயாரித்து இத்தாலி வதிவிட விசா அனுமதியை பயன்படுத்தி துபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
41 வயதான இந்த நபர்கள் புத்தளம், தொடுவாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 3.15 அளவில் துபாய் செல்லவிருந்த விமானத்தில் புறப்பட்டுச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் பின்னர் விமானத்தில் ஏறுவதற்கான அட்டை பெற எமிரோட்ஸ் விமான சேவை அதிகாரிகளிடம் தமது ஆவணங்களை கையளித்துள்ளனர்.
ஆவணங்கள் தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அதிகாரிகள் அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்நுட்ப பரிசோதனைகளில் இத்தாலி விசா மற்றும் ஆவணங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களை கைது செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
