இறைச்சிக்காக பசு மாடுகளை திருடி வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது
மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாடுகளில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது.
கரடியனாறு பொலிஸ்
“கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் 3 பசுமாடுகளை கட்டி வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையில் நித்திரை செய்துவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது கட்டியிருந்த 3 மாடுகளும் திருட்டுப் போய் உள்ளதை கண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து காத்தான்குடியில் உள்ள மாடு வெட்டும் மடுவத்தில் திருடிச் சென்ற பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய வருவதாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (1) இரவு மாட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸாருடன் மாடு வெட்டும் மட்டத்தை சுற்றிவளைத்த போது அங்கு திருடு; போன பசு மாடு இறைச்சிக்காக பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் வெட்டி இறைச்சியாக்கப்பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெட்டிய பசு மாட்டின் தலையை மீட்டதுடன் இரு மாடுகளையும் உயிருடன் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இறைச்சி கடை முதலாளியை கைது செய்து விசாரணையில் அவர் அந்த பகுதி இளைஞர் ஒருவர் தனது மாடுகள் என தனக்கு பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் அவரிடம் இருந்து அதற்கான கடிதத்தை எழுத்து மூலம் பெற்று அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



