யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்தபோது இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டனர் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சண்டிலிப்பாய் - மாசியப்பிட்டி மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைகளுடன் சந்தேக நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கொள்ளையிட்ட நகைகள் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க
பத்மராஜ் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



