வெளிநாடொன்றில் ஆபத்தான புயலுடன் அதிர்ச்சி கொடுத்த இலங்கை, இந்திய பெண்கள்
ஹொங்கொங் புயலின் போது செல்பி எடுக்க முயன்றதற்காகவும் சிறுவனை ஆபத்தில் ஆழ்த்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவனின் தாய் இந்தியர் என்று கூறப்படுகிறது. சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல், ஹொகொங் நாட்டினை தாக்கியிருந்தது.
இதன் காரணமாக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் அலைகள்
புயல் அலைகள் மிகவும் ஆபத்தானவை எனவும் எச்சரிக்கை இல்லாமல் தாக்கக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
While taking a selfie, two women and a child were swept away by powerful waves during Typhoon Ragasa in Hong Kong on September 24. pic.twitter.com/cmfBNxKBhH
— Weather Monitor (@WeatherMonitors) September 25, 2025
இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய், தனது மகனுடன் புயலின் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தார்.
செல்பியை தாயின் தோழியான இலங்கைப் பெண் எடுத்துள்ளார். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்றுள்ளது.
மேலும் மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்திலும் இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளியாக பதிவு
எனினும் எச்சரிக்கையை மீறி புகைப்படம் எடுக்க முயற்சித்த நிலையில் அவர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வயது சிறுவன் உட்பட இரண்டு பெண்களும் புயலில் சிக்கி இழுத்திச் செல்லப்படும் காட்சியை அங்கிருந்து மற்றுமொருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்..
பல மீட்டர் உயரமுள்ள ஒரு பயங்கரமான அலை ஒரே நேரத்தில் மூவரையும் அடித்துச் செல்வதை இது காட்டுகிறது. ரகசா புயல் இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான சூறாவளியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. க் கருதப்படுகிறது.



