இது ''குடு'' அரசாங்கம்! அநுர தரப்பை கடுமையாக சாடிய நாமல்
இந்த அரசாங்கம் குடு அரசாக மாற்றடைந்து செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களை ஏமாற்றிய அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் கதையளந்த அரசுக்களில் அதிகமாக கதையளந்த அரசாங்கம் என்பதோடு அதிக பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அரசாங்கமாக இது விளங்குகிறது.
தங்களின் தவறுகளை மறைப்பதற்காக மற்றையவர்களிடம் அதை தினிப்பதற்கு முயற்சிக்கிறது. நீங்கள் எங்கள் பக்கம் ஒரு விரலை நீட்டும் போது ஏனைய விரல்கள் உங்கள் பக்கம் நீட்டப்படும் என தெரிந்து கொள்ளுங்கள்.
போதைப்பெருள் கொள்கலன் ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து வருவதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பரிசோதனை செய்தும் போதைப் பொருள் கொள்கலன் வெளியில் சென்றுள்ளது.
அப்படியானால் பரிசோதனை செய்யாமல் சென்ற கொள்கலன்களில் என்ன இருக்கும் என தெரியாது. இது தொடர்பில் தகவல் தெரிவித்த அர்ச்சுனா எம்.பியிடம் விசாரணை நடத்தினர். அவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
நீங்கள் நினைக்கலாம் பழைய முறையில் அரசியல் செய்ய முடியும் என. ஆனால் காலம் மாறிவிட்டது. உங்களின் அதிகாரத்தில் இருக்கும் துறைமுகத்தில் தான் கொள்கலன் வெளிசென்றுள்ளது. அதனால் புலனாய்வு தகவல் கிடைத்தும் ஏன் பரிசோதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.



