போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது
ஹொரவப்பொத்தானை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 காட் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
சந்தேக நபர்கள் ஹொரவ்பத்தனை, மொரவெவ மற்றும் ராஜாங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் 28 மற்றும் 35 வயது உடையவர்கள் ஆவர்.
ராஜாங்கனையைச் சேர்ந்த சந்தேகநபர், கடந்த 30ஆம் திகதி மாலை மொரவெவ பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் இல்லத்திற்குப் போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காகப் போதைப்பொருள்களைக் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கெப்பித்திக்கொல்லாவ
நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
