மின்சார அளவீட்டு கருவியில் மோசடி செய்த வீட்டின் உரிமையாளர்கள் கைது
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீட்டுமானியில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகளினால் நேற்று (22.09.2023) கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மோசடி
குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார அளவீட்டு மானியில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மின்சார அளவீட்டு மானியை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
