பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது
குருணாகல் - நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (7) இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்கள் தம்பதெனியா மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தங்கள் மீது உள்ள குற்றத்தை நீக்குவதற்காக பொலிஸ் அதிகாரிக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்கியுள்ளதாக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
