யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் வாங்கிய இலஞ்சம் - நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..!
யாழ்ப்பாணம்(Jaffna) தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்சம் பெற்றதாக யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பொலி்ஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மக்களது கோரிக்கை
இவ்வாறான முறைப்பாடு பதிவு செய்யப்படும் போது அதனை 48 மணி நேரங்களுக்குள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
அத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இதுவரை இடமாற்றமோ அல்லது எந்த விதமான ஒழுக்காட்டு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாமல் அதே பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வருகின்றார்.
இந்நிலையில் பொலிஸார் இதுவரை குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாது, மூடி மறைப்பதற்கு முயற்சிக்கதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |