கொழும்பில் தொடருந்து சாரதியை தாக்கிய பெண் உட்பட ஒருவர் கைது
மருதானை புகையிரத நிலையத்தில் இயந்திர சாரதி ஒருவரை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவத்துள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (31.10.2023) இடம்பெற்றுள்ளது. தொடருந்து சாரதி மெதுவான வேகத்தில் தொடருந்தை மருதானை நடைமேடைக்கு கொண்டு வந்தார் என தெரிவித்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சாரதி பொலிஸாரிடம் முறைப்பாடு
பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் திடீரென தன்னை அச்சுறுத்தி தாக்கியதாக தொடருந்து சாரதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மருதானை பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக குறித்த பெண்ணையும் ஆணையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan