அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று(31.10.2023) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு முறைகேடற்ற வார்ததைகளை பிரயோகித்து சத்தமிட்டதுடன் தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்தது.
வழக்கு விசாரணை
இவ்வாறான இன முரன்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும் தேரர் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.10.2023) முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸார் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தொடர் விசாரணையின் பின்னர் தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்த மோகனை பிரதிவாதியாக குறப்பிட்டு தேரருக்கு எதிராக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.
இதன்படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் வழக்கை விசரணைக்கு எடுத்தக் கொண்டு தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறவெட்டுக்களில் பதிவு செய்து 20ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வழக்கை விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார்.

தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் : அம்பிட்டிய தேரருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்
You May like this





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri
