மட்டக்களப்பில் 44.5 பவுண் நகைகளை திருடிய இருவர் கைது
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் திருடப்பட்ட எழுபது லட்சம் ரூபா பெறுமதியான 44.5 பவுண் எடையுடைய நகைகள் பொலிஸாரின் முயற்சியினால் மூன்று நாட்களின் பின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (06.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மற்றும் மீறாவோடை பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகை திருட்டு
ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த 03.01.2023 அன்று ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டிலிருந்து 44.5 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருவர் கைது
இதன்போது நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்ந்தேர்ச்சியான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதற்கு போதைபாவனையின் அதிகரிப்பே காரணம் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



