காலியில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது
வீதியில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்றை அரக்கத்தனமாக அடித்துக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி (Galle), அக்மீமன பொலிஸ் நிலையத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து இறங்கிய நபரொருவர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்றை தடியால் அரக்கத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் குறித்த காணொளிக்காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் குறித்த காணொளிக் காட்சியில் காணப்பட்ட முச்சக்கர வண்டியின் இலக்கத்தைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை காலி, அக்மீமன பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
