திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனர்கள் பலர் பாதிப்பு
சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இன்று பெரும் செயலிழப்புக்குள்ளாகியுள்ள நிலையில் உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெக்டரின் அறிக்கையின் படி, இந்த பிரச்சினை இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில், கிட்டத்தட்ட 2,300 பயனர்கள் தளத்தை அணுகுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். குறிப்பாக தேடல் செயலியில் உள்ளடக்கத்தை ஏற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இடையூறுக்கான காரணம்
இந்த செயலிழப்பு இலங்கை நேரப்படி பிற்பகல் 3:40 மணியளவில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இந்த இடையூறு மிகவும் பரவலாக உள்ள நிலையில், அங்கு 21,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பிரித்தானியாவில் 10,800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பயனர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
ஏனெனில் தளத்தின் செயலிழப்பு அறிக்கைகள் பயனர் சமர்ப்பிப்புக்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் சர்வதேச தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இடையூறுக்கான காரணம் குறித்து X நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam
