எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை: விரைவில் நீக்கப்படும் 150 கோடி டுவிட்டர் கணக்குகள்
அண்மையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். ட்விட்டரை விலைக்கு வாங்கியது முதலே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழுவினரின் பணி நீக்கம், டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்க்கான கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீக்கப்படும் 150 கோடி டுவிட்டர் கணக்குகள்
இந்த மாற்றங்கள் அனைத்தும் டுவிட்டர் ஊழியர்களுக்கும் பயனாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
These are obvious account deletions with no tweets & no log in for years
— Elon Musk (@elonmusk) December 9, 2022
இந்த நிலையில் விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எலான் மஸ்க் டுவிட்டர் பதில் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத கணக்குகள்
“அதாவது பல வருடங்களாக டுவீட் அல்லது டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.
“டுவிட்டர் தளத்தில் உள்ள மெமரி, அளவுக்கு அதிகமாக ஆக்கிரமித்துள்ள நினைவகத்தை சேமிக்கும் வகையில், 1.5 பில்லியன் கணக்குகளை நீக்கப்பட உள்ளதாக” தெரிவித்துள்ளார்.
4400 கோடி டொலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
