கோவிட் தொற்றால் ஒரே நாளில் இரட்டை சகோதரர்கள் உயிரிழப்பு
இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் திகதி ஒரே நாளில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
