முதலமைச்சராக பதவியேற்கவுள்ள விஜய்! வெளியான தகவல்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் பதவியேற்பு விழாவானது எதிர்வரும் (7.5.2026) அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையிலே, நாளை(6) காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ள விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவியேற்பு
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று த.வெ.க. ஆட்சியமைக்கவுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு, பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை 3 நாட்களுக்கு சென்னையிலேயே இருக்குமாறு த.வெ.க. தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.