2 மாதங்களுக்குப் பிறகு! வெளியில் வந்த த.வெ.க. பரப்புரை வாகனம்..
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் வாகனம் இன்று(8) மாலை வெளியே வந்துள்ளது.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்கவில்லை.
த.வெ.க. பொதுக்கூட்டம்
இந்த நிலையில், பொலிஸாரின் அனுமதியுடன் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை(9) த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்டவுள்ளார்.
அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.
விஜயின் பிரச்சார வாகனம்
அதற்கு முன்னதாக விஜயின் பிரச்சார வாகனம் இன்று(8) மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டது.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயின் பரப்புரை வாகனம் வெளியே வந்தது. அதன்படி, இன்று மாலையே பரப்புரை வாகனம் புறப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசவுள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது.
அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.