அறியாமல் செய்த தவறு..! மன்னிப்பு கோரினார் தவெக அமைச்சர் கீர்த்தனா
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெக அமைச்சர் கீர்த்தனா அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
அரசியலாக்க வேண்டாம்
அதன் பின்னர், தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.அவருடன் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. கீர்த்தனாவும் அமைச்சராக பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா பயன்படுத்திய சில வார்த்தைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான்; அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. அறியாமல்…
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) May 13, 2026
இந்தநிலையில், அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், “மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக் குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள்தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் தெரியும்.
அறியாமல் ஏற்பட்ட தவறை அரசியலாக்க வேண்டாம். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam