ஷானி அபேசேகரவை காப்பாற்றிய தமிழ் பெண்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) பதவியுயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஷானி அபேசேகர 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பொலிஸ் பரிசோதகராகத் தனது சேவையை ஆரம்பித்தார். அவர் 2017 செப்டம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அவரது திறமை மற்றும் தகைமையின் அடிப்படையிலேயே இந்தப் பதவி வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நேரடியாகவே பலிவாங்க்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
ஷானி அபேசேகர இடைநிறுத்தப்பட்டிருந்த போது அவருக்கு யாரும் உதவ முன்வராத நிலையில்,சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தான் தனக்காக வாதாடினார் என்று அவர் ஒரு நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam