த.வெ.க தலைவருக்கு சற்றுமுன் மற்றுமொரு ஆதரவு! பரபரப்பாகும் தமிழக அரசியல் நிலவரம் - அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள்
தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை சற்றுமுன் அறிவித்துள்ளது.
அதன்படி தவெகவின் ஆதரவு 117ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் விசிக ஆதரவு வழங்குமானால் இந்த ஆதரவு எண்ணிக்கை 119ஆக உயருமென தெரியவருகிறது.
இவ்வாறான சூழலில் இன்று மாலை 6 மணிக்குள் ஆளுநரை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே நாளைய தினம் பெரும்பாலும் ஜோசப் விஜய் எனும் நான்..! என்ற வரலாற்று நிகழ்வு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முதன்முறையாக சந்தித்திருக்கும் தவெக தனிபெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது.
எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவருகிறது.
திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி தலா 2 இடங்களை பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளும் இன்று முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அக்கூட்டம் நிறைவடைந்த பிறகு, முடிவுகளை அக்கட்சி அறிவிக்கவிருக்கிறது.

இந்த சூழலில்தான், விசிக தலைவர் திருமாவளவனுடனான பேச்சுவார்த்தையில், அக்கட்சி திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்பதாகவும், அதேசமயம், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது. எனினும் விஜய் முதலமைச்சராகுவதால் அந்த தொகுதிக்கான வெற்றிடம் ஏற்படும் நிலையில் இன்னும் நான்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.
ஆதரவு கோரல்
இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய், பொறுப்பு ஆளுநர் ஆர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam