ஷிரந்தி ராஜபக்சவிற்கு சொந்தமான பல கோடி பெறுமதியான வீடு! மொட்டுக்கட்சி சி.ஐ.டியில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபா பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
திடீரென உயிரிழந்த கபில சந்திரசேன! விசாரணைக்காக வீட்டிற்கு விரைந்துள்ள முக்கிய அதிகாரிகள் - பொலிஸார் குவிப்பு
தற்போதைய அரசின் ஊழல்கள்
இந்த முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பசன் கஸ்தூரி,

"தற்போதைய அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் உள்ள ஆளுந்தரப்பின் 159 உறுப்பினர்களினதும் பல நரம்புகள் அதிரத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள்." என்று குறிப்பிட்டார்.
"ராஜபக்ச குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஒரு சிறிய விளையாட்டு வீடு இருப்பதாகத் தெரிந்தால் கூட இந்த அரசு சும்மா இருக்கப்போவதில்லை என்பதை நாடு அறியும். அவ்வாறான நிலையில், ஆதாரமற்ற இவ்வாறான செய்திகளை அரசு திட்டமிட்டுப் பரப்புகின்றது." என்றும் அவர் சாடினார்.
விசாரணைகளின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறி
நீதி அமைச்சரின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், "நீதி அமைச்சர் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு வாய்ப்பாடு வாசிப்பதைப் போல், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துப் பேசி வருகின்றார்.

இவ்வாறு அரசியல் மேடைகளில் வழக்குகளைப் பகிரங்கப்படுத்துவதன் ஊடாக, விசாரணைகளின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது" என்றும் தெரிவித்தார்.
அரசியல் இலாபத்துக்காக விசாரணைகளை அமைச்சர் திசைதிருப்புகின்றார் என்றும், இவ்வாறான நிலையில் அரசு முன்னெடுக்கும் விசாரணைகளை மக்கள் எவ்வாறு நம்புவார்கள் என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam