139 மேலதிக வாக்குகளால் மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நேற்று(07) நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றம் கூடியபோது, அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
ஒரு மாத காலத்துக்கு நடைமுறை
விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் கிடைத்தன.
எதிராக எதிரணியில் இருந்து 6 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

எனினும், ஆளும் தரப்பின் பெரும் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan