விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால்.. கரூர் பெருந்துயர் தொடர்பில் செந்தில் பாலாஜி
விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது, விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கரூர் சம்பவம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 27ஆம் திகதி கரூரில் நடந்த துயர சம்பவம் என்பது கொடுமையானது. யாராலும் எந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவமாகும்.
தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்தை அரசயலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும். கரூரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
த.வெ.க. பிரசாரம்
ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். தற்போதைய நிலவரத்தில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன்.
த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க முடியும் இடம் வேலுசாமிபுரம்தான். எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி. லைட் ஹவுஸ் மூளைகளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும்.
கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு. த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் போத்தல்களையாவது பார்த்தீர்களா?
லைட் ஹவுஸ் மூளையில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



