தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 2026 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் முழு வேட்பாளர் பட்டியலை இன்று(29) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
சென்னை நகரில் கடும் பாதுகாப்பு மத்தியிலும் கட்சித் தொண்டர்கள் திரண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றி கழகம்
‘விசில்’ (Whistle) சின்னத்திற்கு வாக்களிக்க மக்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக வெற்றி கழக கட்சியின் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையையும் அவர் வலியுறுத்தினார்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது முதல் தேர்தல் முயற்சியில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
#WATCH | Chennai, Tamil Nadu: Actor and TVK chief Vijay announces the list of candidates for the 2026 Assembly elections today.
— ANI (@ANI) March 29, 2026
Vijay is contesting in 2 constituencies- Trichy East and Perambur (Chennai)
(Source: TVK) pic.twitter.com/20Ga9CvY5Z
தனது பெயர் வாக்குச்சீட்டில் ‘சி. ஜோசப் விஜய்’ (C Joseph Vijay) என இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல்
மேலும், கட்சியின் மூத்த தலைவர்களான என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்தபடி, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை ஒரேநாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜயும் நாளை(30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


