இலங்கை அரசியலில் திருப்பு முனை: கோட்டாபயவின் அதிரடி தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக 3 பீடங்களின் பீடாதிபதிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,