ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை

Turkey Sports
By Shadhu Shanker Sep 16, 2026 08:10 AM GMT
Report

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக தடகளத்தின் Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க, நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, நேற்று (15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை | Turkish Airlines Promises Action And Compensation

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற கேணல் ரஞ்சித் ராஜசிங்க மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் துருக்கி ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

 இழப்பீடு வழங்க நடவடிக்கை

சேதமடைந்த உபகரணங்களுக்கான இழப்பை முறையாக மதிப்பீடு செய்து, வீரருக்கு ஏற்பட்ட இழப்புக்கு விரைவாக இழப்பீடு வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை | Turkish Airlines Promises Action And Compensation

உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைப் பெறவும் ருமேஷ் தரங்க பயன்படுத்திய ஈட்டிகள் சிலவும் போக்குவரத்தின்போது சேதமடைந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பல சர்வதேச பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவர் அண்மையில் இலங்கை திரும்பியிருந்தார்.

அவரது இந்த வெற்றிகள் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக தடகளப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் வெற்றி வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை

அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை

விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ள ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள்

விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ள ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள்

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US