துருக்கியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணம் இவர்கள் தான்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
துருக்கியை சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர்கள் உட்பட 171 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு ஈடுகொடுக்காத கட்டிடங்களால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
171 பேருக்கு எதிராக பிடியாணை
அதன்படி, உறுதியற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் கட்டடங்களை கட்டியதாக கட்டட ஒப்பந்தக்காரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 171 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கைகள்
மேலும் தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பில் துருக்கி அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 43,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதனால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் போனோரை தேடுவதற்காக, பல நாட்கள் நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



