பின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி ஆதரிக்காது : அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்புவதற்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது என அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
நோட்டோ கூட்டமைப்பில் ஏதேனும் புதிய நாடுகள் இணைய வேண்டுமென்றால், அதற்கு தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில், துருக்கி ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது.
அத்துடன் ரஷ்ய, உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.
ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக துருக்கியின் வர்த்தக சந்தையில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு போக்குவரத்துக்கான தடை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை துருக்கி அரசு சந்தித்து வருகிறது.
இதுதொடர்ந்தால் சிறிய கப்பல் நிறுவனங்களை மூடவேண்டிய அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,