துருக்கியில் கோர விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரை இஸ்தான்புல் நகருக்கு அனுப்பவுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர்களின் தற்போதைய நிலை
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுரங்கப்பாதையில் பயணித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் இருந்து விலகி சுமார் 6 மீற்றர் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விபத்து குறித்து யூப் சுல்தான் மாவட்ட ஆளுநர் இஹாசன் காரா கருத்து தெரிவிக்கையில்,
‘‘பேருந்து கவிழும் போது அதில் 39 பேர் பயணித்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் பெரிய ஆபத்து இல்லை, உயிர் சேதம் இல்லை.கடவுளுக்கு நன்றி, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 27. தற்போது அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
