அதிக விலைக்கு ஏலம் போன 2- UNCAPPED வீரர்கள்! படைக்கப்பட்ட சாதனை
19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற UNCAPPED சகலத்துறை ஆட்டகாரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் இன்று(16) தொடங்கியது.
அதிக விலை
பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற மினி ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
இந்தநிலையில், ஆரம்ப விலை ரூ.30 லட்சத்தில் இருந்த பிரசாந்த் வீர் என்ற UNCAPPED சகலத்துறை ஆட்டகாரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பார் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது என கூறப்படுகின்றது.

அடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா என்ற UNCAPPED வீரர் அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அணிக்காக (International level) இன்னும் அதிகாரப்பூர்வ போட்டியில் விளையாடாத வீரரை UNCAPPED வீரர் என்று குறிப்பிடுவார்கள்.