துருக்கி பேரிடரில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட கால்பந்து வீரர்! சோகத்தில் ரசிகர்கள்
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பரான 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் என்ற வீரரே உயிரிழந்துள்ளார்.
மாயமான வீரர்
கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர் மாயமானதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியின் தனியார் கால்பந்து அணியான Yeni Matalyaspor குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு அஞ்சலி
தங்கள் அணியின் கோல்கீப்பரை இழந்துள்ளதாகவும், இயற்கை பேரிடருக்கு அருமையான ஒரு நபரை இழந்துள்ளோம் எனவும் Yeni Matalyaspor அணி நிர்வாகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே,திங்கட்கிழமை அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மனைவியை உயிருடன் மீட்டுள்ளதாகவும், இறுதி வரையில் போராடியும் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
