மற்றுமொரு பேரழிவை சந்திக்கப்போகும் துருக்கி மக்கள்! பெரும் உயிர் ஆபத்தில் இலட்சக்கணக்கானோர்
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் துருக்கியின் தென் பகுதியை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இஸ்தான்புல் நகரை சேர்ந்த எஞ்சியுள்ள ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் மற்றுமொரு அபாயத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள பாதிக்கப்பட்ட கட்டடங்கள் நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்த கட்டடங்களில் தொடர்ந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்து
பூகோளத்தில் நில அதிர்வு ஏற்படக்கூடிய மத்திய ரேகைக்கு மிக அண்மையில் துருக்கி உள்ளதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
மிக உயரமாக உள்ள பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் முற்றாக இடிந்து விழுந்து விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நகரத்தின் 70 சதவீதமான கட்டடங்களின் இடிபாடுகள் மட்டுமே மிகுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் நிபுணர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடுத்து அந்த நகரத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடுவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் வெளியேறியதன் பின்னர் எப்படிப்பட்ட நில அதிர்வு ஏற்பட்டாலும் அதனை தாங்கக்கூடிய சக்திவாய்ந்த முறையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆய்வில் வெளியான தகவல்
இதேவேளை, தற்போதைய நில அதிர்வுகள் ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட புவியியல் தொடர்பான விசேட ஆய்வின் போது, துருக்கியில் பாரிய நில அதிர்வு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
அப்படியான நில அதிர்வு ஏற்படும் பட்சத்தில் 90 ஆயிரம் உயிர்கள் காவுகொள்வதற்கான ஏதுநிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பெரிய அளவில் அவதானம் செலுத்தவில்லை என தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது, நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்னர் எச்சரிக்கையினை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை வழங்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இது குறித்தும் மக்கள் பெரிய அளவில் அவதானம் செலுத்தவில்லை என நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
