துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 178 மணி நேர போராட்டம்! உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
35,000 பேர் உயிரிழப்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதில் இதுவரை 35,000 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,துருக்கியில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மோப்ப நாய்கள் காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளுக்காக சென்றுள்ள இந்திய மீட்புக்குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த ஜூலி மற்றும் ரோமியோ மோப்ப நாய்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரு மோப்ப நாய்களும் நூர்தாகியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6 வயது சிறுமியை காப்பாற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
