TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Parthiban Jan 10, 2024 04:27 AM GMT
Report

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்களிப்பதற்கான வாய்ப்பினை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது.

பெருங்குற்றங்களை இழைத்தவர்களை நேரில் கண்ட சாட்சிகள் அடையாளம் காட்டமுடியும் அல்லது ஆணைக்குழுவின் முன்னால் தனிப்பட்டவர்கள் குற்றங்களை இழைத்ததை ஒத்துக்கொள்ள முடியும் . ஆனால், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள், அவர்களது குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், தண்டனைகளிலிருந்து விலகியிருப்பார்கள்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வடக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

“எத்தனையோ ஆணைக்குழுக்களை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். ஆணைக்குழுக்களின் வாசலிலேயே நாங்கள் போய் நின்று, காலங்கள் கடந்ததே தவிர, எந்தவொரு ஆணைக்குழுவும் வந்து எங்களுக்கு எந்தவொரு நீதியையும் வழங்கவில்லை.

இப்போதும் அதேபோல் தெற்கிலும், கிழக்கிலும் ஒரு ஆணைக்குழுவை கொண்டுவந்துள்ளார்கள் சமாதானம் எனக் கூறி, ஒவ்வொரு அமைப்புக்களையும் அழைத்து கதைக்கின்றார்கள்.” என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி மானுவல் உதயசந்திரா வலியுறுத்தியிருந்தார்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TURC) ஸ்தாபிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பில் தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்


குறித்த அறிக்கையின் முழு வடிவம் கீழே,

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்கான சட்டம், மசோதா ஒன்றினை இலங்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலமானது சர்வதேச சமூகத்திற்கான பல எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதாகத் தோன்றினாலும் கூட, அதனை நெருக்கமாகப் பார்க்கும்போது அதிலுள்ள ஆழமான குறைபாடுகளும், பாரிய குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு நீதி வழங்காமல் துரோகம் செய்வதையும் பார்க்க முடிகின்றது.

இது ஒருபுறமிருக்க, வன்முறை நிகழ்ந்த நாட்டின் வரலாறு தொடர்பான உண்மையினை அறிந்துகொள்வது தொடர்பில் அரசியல் விருப்பம் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்


ஆதாரங்கள்

ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு ஆதாரமும், நீதிமன்றத்திலோ அல்லது எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிற்கோ சமர்ப்பிக்கப்படமாட்டாது.

பெருங்குற்றங்களை இழைத்தவர்களை நேரில் கண்ட சாட்சிகள் அடையாளம் காட்டமுடியும் அல்லது ஆணைக்குழுவின் முன்னால் தனிப்பட்டவர்கள் குற்றங்களை இழைத்ததை ஒத்துக்கொள்ள முடியும்.

ஆனால், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள், அவர்களது குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், தண்டனைகளிலிருந்து விலகியிருப்பார்கள்.

புறச்சூழ்நிலைகள் வேண்டும் போதிலும் கூட, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை இவை சாத்தியமற்றதாக்கும், அதாவது சட்டமியற்றாமலேயே ஒரு பொதுமன்னிப்பு ஏற்பாடாக அமையும்.

லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டித்த இலங்கை மின்சார சபை!

லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டித்த இலங்கை மின்சார சபை!


சட்டமூலத்தின் படி, 'பாரதூரமான குற்றச்செயல்களை சம்பத்தப்பட்ட சட்ட அமுலாக்க அல்லது வழக்குத்தொடுக்கும் அதிகாரிகளிடம் முறையிடுவதற்கான உரிமை" பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளது.

ஆனால் ஆணைக்குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது என்னும் மசோதாவின் பந்தியுடன் முரண்பட்டு நிற்கின்றது.

ஆணைக்குழுவிற்குக் கிடைக்கும் தகவல்கள் குற்றமிழைத்தவர்களுக்க எதிரான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் இந்த உரிமையின் பயன்பாடு தான் என்ன? இது முட்டாள்தனமானதும் அபத்தமானதுமாகும்.

வழக்குகளை சட்டமா அதிபர் அலுவலகத்திற்குப் பரிந்துரைகள் செய்யலாம் என்று இச்சட்டமசோதா கூறுகின்றது.

இது இலங்கையிலுள்ள அனைவருக்கும் தெரிந்தது போன்று, நல முரண்களைக் கொண்டுள்ளது. காரணம், அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் உரிய வழக்குரைஞராகவும் (சுயாதீனமற்ற) வழக்குத்தொடுனர் அதிகார அமைப்பாகவும் இவ்வலுவலகமே செயற்படுகின்றது.

கடந்த காலங்களில் நடந்த பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சட்ட அமுலாக்க அமைப்புக்கள் உடந்தையாக இருந்து செயற்பட்டதை வைத்துப் பார்க்கையில், அவர்களும் சமரசம் செய்துள்ளது வெளிப்படையே.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

கடந்த பல தசாப்தங்களாக தீர்வுகளைப் பெற்றுத்தர முடியாத அதே கட்டமைப்புக்களே இப்போதும் விசாரணைகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கப்பார்க்கின்றார்கள் என்பது வேதனையானதே.

இதனால் தான், பாதுகாப்புப்படையிலுள்ள எவரும் அல்லது அவரது சகாக்களோ குற்றவாளியாக ஏற்றுக்கொள்ளப்படுவதோ அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படுவதோ சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..!

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்..!


கலப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தினை இலங்கை அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்னரே நிராகரித்தது. மாறாக சர்வதேச குற்றங்களையோ அல்லது அதிகாரப்படிமுறைப் பொறுப்பினையோ ஏற்றுக்கொள்ளாத, இலங்கையன் குற்றவியில் நீதிமன்றங்களின் கீழேயே சட்டமா அதிபர் அலுவலகமும் நீதித்துறையும் செயற்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒரு வேளையில் புதிய கீழ்நிலை படைவீரர் ஒருவர் கொலைக்குற்றச்சாட்டுக்குள்ளாகி குற்றவாளியாக ஆக்கப்படலாம். ஆனால் ஜெனரலோ அல்லது அரசியல்வாதியோ எழுந்தமானமாக தடுத்துவைக்கும் படி கட்டளையிட்டமைக்காக, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவும், மருந்தும் போகாமல் தடுத்தமைக்காக, சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்தமைக்காக, அவருக்குக் கீழிருந்த படைவீரர்கள் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வதை அனுமதித்தமைக்காக, அல்லது அவர்களது பொறுப்பிலிருந்து காணாமல்போன தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கேட்காமல் விட்டமைக்காக, பொறுப்புக்கூற வைக்கப்படமாட்டார்.

நடந்துகொண்டிருக்கும் அல்லது எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய ஆபத்து உள்ள இடங்கள் (பந்தி 7(4)க) உள்ளிட்ட - பல நேரங்களில் இவ்வாணைக்குழு பூட்டிய அறைகளுக்குள் பல அமர்வுகளை நடத்தலாம்.

இது பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்ட தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளை உள்ளடக்காமல் விடுமா? காணாமல்போனவர்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் ஒத்திவைக்குமாறு கோருவதற்கான உரிமையினை 49 ஆவது பந்தி காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்திற்கு வழங்குகின்றது.

இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடைபெற்று வரும் வழக்குகளை இல்லாமல் ஆக்கிவிடும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தந்தையானார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தந்தையானார்


நியமனங்கள் 

இவ்வாணைக்குழுவிற்கான வேட்பாளர்கள் அரசியல்யாப்பு சபையினால் முன்கூட்டியே தெரிந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த அமைப்பானது நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களிடமிருந்து சுதந்திரமாகச் செயற்படமுடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அத்துடன், இதர பல நாடுகளைப் போலவே உறுப்பினர் தெரிவானது நேர்காணல் காணப்பட்டு, வெளிப்படையாகச் சரிபார்க்கப்படும், வெளிப்படையான செயல்முறையாக இருக்குமாக இருக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இவ்வாணைக்குழுவில் மனித உரிமை மீறல்கள், மோசடி மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் நியமிக்கப்படுவதை தானாகவே விலக்களிப்புச் செய்யவேண்டும், ஆனால் இச்சட்ட வரைபில் இது துல்லியமாகக் கூறப்படவில்லை.

ஜனாதிபதிக்கு ஆலோசனைக் குழுவினை நியமிக்கலாம் என்றும் இச் சட்டவரைபில் கூறப்பட்டுள்ளது.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

ஆனால், இந்த ஆணைக்குழு தொடர்பான விடயத்தில் என்ன ஆலோசனை என்பதை இவ்வரைபில் கூறவில்லை. (பந்தி 32). வெறுமனே, ஆணைக்குழுவிற்கு மட்டுமன்றி, குழுக்களுக்கும் செயலகத்திற்கும் ஆலோசனை வழங்கும் என்றுதான் கூறுகின்றது.

வழங்கப்படும் ஆலோசனை ஊதாசீனப்படுத்தப்பட்டு, அதிகாரப் போட்டி நிலவுமாக இருந்தால் இது முரண்பாடுகளை ஏற்படுத்தும். மேலும் அதிகார அமைப்பினைப் பாதுகாப்பதற்காக ஒரு பாதுகாப்பு வலயமாக இவ்வாலோசனை அமைப்புக்களில் மறுதலிப்பாளர்களையும் நியமிக்க முடியும்.

கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை

கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை


மேலும், ஆணைக்குழு உண்மையைக் கண்டறியும்போது, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக ஒரு கண்காணிப்புக்குழு உருவாக்கப்படும் (பந்தி 39). இவ்வமைப்பின் ஒரு உறுப்பினராக பாதுகாப்புச் செயலர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் உள்ளடக்கப்படுவார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 53 ஆவது டிவிசன் தளபதியாகச் செயற்பட்டவரும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருப்பவருமான ஜெனரல் கமால் குணரத்தினவே தற்போது இருக்கின்றார். இன்னுமொரு உறுப்பினராக நிதியமைச்சர் இருப்பார்.

தற்போது ஜனாதிபதியே நிதியமைச்சராகவும் இருக்கின்றார்.இவர் 1989 பட்டலந்த சித்திரவதையில் ஈடுபட்டிருந்தார் என்று இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

பட்டலந்த அறிக்கை புதிய ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புக்களில் உள்ளடக்கப்படுமா?

11 பேர் கொண்ட கண்காணிப்புக்குழுவின் 5 உறுப்பினர்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்கள். அதேநேரத்தில் 6 முன்னாள் அதிகாரிகளையும் அவர் மறைமுகமாகக் கட்டுப்படுத்துகின்றார். 

அமைப்புமுறை 

இவ்வாணைக்குழுவின் ஆணையானது 'அமைப்பு முறைனா குற்றங்களை" பார்ப்பதற்கான ஒப்புதலுடன் (பந்தி 12) மேலோட்டமாக பரந்தளவிலானதாகத் தோன்றுகின்றது.

'குற்றங்கள்' என்ற சொற்பதப் பயன்பாடு நேர்மறையானதாக இருந்தாலும், 'குற்றச்சாட்டப்பட்ட வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களின்" தனிப்பட்ட குற்றவாளிகளையும் இச்சட்டவாக்கம் குறிப்பிடுகின்றது. இது மிகவும் பலவீமான பகுதியாகும்.

சர்வதேச சமூகத்தினை திருப்திப்படுத்துவதற்காக, கட்டளைப் பொறுப்பு என்னும் சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளது ('ஆலோசனை வழங்கியவர்கள், திட்டமிட்டவர்கள், வழிநடத்தியவர்கள், கட்டளையிட்டவர்கள";), ஆனால், இலங்கை சட்டத்தில் கட்டளைப் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதால் இது வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் விடயமேயாகும்.

இந்த கொடூரங்களுக்கு உண்மையில் யார் பொறுப்பானவர்கள் என்பதை கண்டுபிடிக்கப்போவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு தலைமைகளைப் பாதுகாப்பதற்கென்று உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே இதுவாகும்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டவரைபானது போர்க்குற்றங்களின் முக்கிய சாட்சிகளாக உள்ள, புலம்பெயர்ந்து வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தமிழ்ச் சமூகத்தைப் பற்றி எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

இவர்களே போருக்குப் பின்னர் பல்வேறு ஐ.நா. அமைப்புக்களுக்குச் சாட்சியங்கள் வழங்கியதுடன், (இன்றுவரை) சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கை ஏற்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்கள்.

இலங்கை முழுவதும் அமர்வுகளை மேற்கொள்வதற்கான சட்டவிதி உள்ளது, ஆனால், ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளுள் இருந்தமைக்கான உதாரணங்கள் இருக்கின்றபோதிலும், வெளிநாடுகளில் வாழும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் வாக்குமூலங்கள் வழங்குவதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை . 

அதிகாரம்

'அறிக்கைகள், பதிவுகள், ஆவணங்கள் அல்லது தகவல்களை அரசாங்க அதிகாரிகளிடம் அல்லது இதர இடங்களிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் தேவைப்பட்டாலும் தேவைப்படும் போதும், ஆவணங்காப்பகங்களிலிருந்து பெற்றுக்கொள்வது உள்பட இவ்வாறான விடயங்களை பெற்றறுக்கொள்ள நிர்ப்பந்திப்பதற்குமான அதிகாரத்தினை இவ்வாணைக்குழு கொண்டுள்ளது .(பந்தி13 )

எனினும், கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு வாக்குமூலங்களை வழங்கிய பாதிக்கப்பட்டவர்களிடம் (ஜே.வி.பி. காலத்தில் நடந்த காணாமல்போதல்கள் தொடர்பானவை போன்ற) அரசாங்க ஆவணக்காப்பகங்களில் பேணப்பட்டுவதும், தாங்கள் கடந்த காலங்களில் வழங்கிய வாங்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை.

பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர்கள் வழங்கிய சாட்சியங்களிலிருந்து முரண்படாமல் இருப்பதற்கு அவற்றைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும்.

இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாக்குறுதி சாத்தியமானதாக இருந்தாலும், நடைமுறையில், இலங்கையில் உருவாக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களும் விசாரணைக்குழுக்களும் உண்மையையோ நீதியையோ பெற்றுக்கொள்ளாதது மட்டுமன்றி, தங்களது சொந்த அறிக்கைகளையே கூட ஒருபோதும் வெளியிட்டதில்லை.

மேலும், ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாக நீதிமன்றங்கள் விடுத்த அழைப்பாணைகளையே இலங்கை இராணுவம் மறுதலித்துள்ளது.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

ஆதலால், இந்த ஆணைக்குழுவில் இது எந்தளவுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. மேலும், தேடுதல் ஆணையினைப் பெறுவதற்கு நீதவான் நீதிமன்றம் ஒன்றில் தங்கியிருக்க வேண்டியிருப்பது ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கும் என்பதையே இதர இடங்களில் நிகழ்ந்த அனுபவங்கள் காட்டுகின்றன.

இவ்வாறே, பந்தி 13  'இவ்வாணைக்குழுவின் விசாரணைகளை முன்னேற்றத்திற்குத் தேவைப்படுவதால் இலங்கை பொலிஸாரின் உதவியை நாடுவதையும்' ஏதுவாக்குகின்றது.

ஆனால், நடைமுறையில் பொலிஸார் தம்மைத்தாமே விசாரணை செய்யமாட்டார்கள் என்பது அங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். இவ்வாணைக்குழுவின் மொழிநடையானது அது ஒரு வரையறுக்கப்பட்ட செயலாகவே இருக்கப்போகின்றது என்பதையே உணர்த்துகின்றது.

இவ்வாணைக்கு 'மேலதிக விசாரணைகளுக்கும் தேவையான நடவடிக்கைக்கும் இலங்கையின் சம்மந்தப்பட்ட சட்ட அமுலாக்க அல்லது வழக்குத்தொடுக்கும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்" (பந்தி 13 ஒன). சந்தேக நபர்கள் மீது வழக்குத்தொடரவோ அல்லது ஏன் பரிசோதனையிடவோ ஏன் முடியாது? 

ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

தீங்கு, மூலகாரணங்கள், சீரமைப்புக்கள் மற்றும் பரிகாரங்கள் போன்ற பல விடயங்களில் ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளது, ஆனால், குற்றவியல் பொறுப்புக்கூறல்கள் அல்லது வழக்குத் தொடுத்தல்கள் பற்றி எதுவுமில்லை.

மேலும், மீளவும் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகள் அது மேற்கொள்ளவேண்டும். இதனைச் செய்வதற்கு, வழக்குத் தொடரும் நோக்கத்துடன், எதிர்கால விசாரணைகள் தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

'ஆணைக்குழுவின் பரிந்தரைகள் எந்தவொரு நபரதும் குடியியல் அல்லது குற்றவியல் பொறுப்பினை நிர்ணயிப்பதாக இருந்துவிடக்கூடாது என்பதில் இச்சட்டசோதா உறுதியாக உள்ளது." (பந்தி 16(1)). இவ்வாணைக்குழுக்கள் நீதித்துறை அமைப்புக்கள் அல்ல, மாறாக அரை-நீதித்துறையே, அத்துடன் எந்தவொரு சந்தப்பத்திலும், வழக்குத்தொடுக்கும் அதிகார அமைப்பிற்கு பரிந்துரையே செய்ய வேண்டும் என்பதாலும், அடுத்த பந்தியிலுள்ள (16(2)) இச்சரத்து அத்தியாவசியமற்றதாகும்.

TURC சிறைத்தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நவீன துருப்புச்சீட்டு | Turc Is A Modern Immunity Card

எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறக்கூடிய எந்தவொரு சர்வதேச கண்காணிப்பினைத் தவிர்க்கவும், சுயாதீன விசாரணை நடவடிக்கையை இல்லாமல் செய்யவும் நோக்காகக்கொண்டு சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காகவே இச்சட்டமசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர், மற்றும் ஜே.வி.பி காலம் ஆகியவற்றில் இழைக்கப்பட்ட பாரதூரமான சர்வதேச குற்றங்கள் நடைபெற்றதற்கான கட்டளைப்பொறுப்பினை வகித்தவர்கள் மீது எந்தபொரு குற்றவியல் பொறுப்புக் கூறல்களும் இருக்கமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஏமாற்று வேலையே இதுவாகும்.

நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US