எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தந்தையானார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச தம்பதியினர் குழந்தைச் செல்வமொன்றை பெற்றெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த சமிந்த விஜேசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் வீதியில் இருக்கும் பிள்ளைகளை அள்ளி முத்தமிட்ட போதிலும் அவர்களுக்கு நலன்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், சஜித் பிரேமதாச நாட்டின் பிள்ளைகளுக்கு தந்தையாக முடியும் என்பதனை நிரூபித்து, குழந்தைச் செல்வத்திற்கு தந்தையாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறப்பு குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
குழந்தை பாக்கியம்
சஜித் பிரேமதாசவிற்கு பிள்ளைச் செல்வம் கிடையாது என்பது அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தனர்.
சஜித் மற்றும் ஜலனி தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தமை தொடர்பில் அவர்களது தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
