கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
கரீபியன் (Caribbean) கடலில் நேற்று (08) மாலை 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நில அதிர்வு 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம்
ஹோண்டுராஸ் (Honduras) வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🚨 #FOOTAGE #EARTHQUAKE POWERFUL 8.0 magnitude earthquake has just struck the Caribbean Sea. Group of diverse filming caught the violent earthquake that resulted in swells. POTENTIAL numerous tsunami alerts to coastal region pic.twitter.com/AtKVe0DRlk
— 24/7WeatherPhenomenaObserver (@24weather24) February 9, 2025
இதனிடையே நில அதிர்வினால் உருவான அபாயகரமான ஆழிப்பேரலை அலைகள் கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan