தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos)

Tamils Sri Lanka Politician United States of America Northern Province of Sri Lanka
By Kumar Oct 18, 2022 11:43 AM GMT
Report

இந்த நாட்டில் தமிழ்மக்களை எள்ளிநகையாடி,ஏளனமாக நினைத்து ஆட்சிக்கு வரும் இலங்கை அரசாங்கம் அவர்களை ஏமாற்றி வருகின்றது.இதற்கான பிரதான காரணம் தமிழ்கட்சிகளின் ஒற்றுமையின்மையாகும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ரெலோ கட்சி தியாகிகளை கௌரவிக்கும் அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியகல்லாறு, பல தளபதிகளையும், திறமையான போராளிகளையும் உருவாக்கிய சிறந்த மண்ணாகும்.

ஈழவிடுதலைப் போராட்ட தியாகிகள்

தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos) | Tsri Lankan Government Deceiving Tamils

ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து சென்ற முதற்போராளி தோழர் சிவாவை இந்தமண் ஈர்ந்து உவர்ந்தளித்துள்ளது.

அதேபோன்று காரைநகர் கடற்படைத்தளத்தில் உயிர்நீத்த போராளி தோழர் வேலுவையும் நாங்கள் மறக்கமாட்டோம்.

முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் உப-சபாநாயகர் தோழர் கணேசையும்,பல தியாகிகளையும் இந்த மண் இழந்து தவிக்கின்றது. இம்மண்ணின் பெருமையை சொல்வது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ்மக்கள் மீது கட்டவீழ்த்தப்பட்ட இனசுத்திகரிப்பு, இன அடக்குமுறை, அநியாயங்கள், கொடுமைகளை துடைந்தெறிந்து தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் எனும் தமிழின விடுதலைப்போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பை இம்மண்ணில் உதிர்த்த தியாகிகள் செய்திருகின்றார்கள்.

தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos) | Tsri Lankan Government Deceiving Tamils

இது இங்குள்ள மக்களுக்கும் தியாகிகளின் குடும்பங்களுக்கும் நன்கு புலப்படும். ஈழவிடுத்தலைப் போராட்டம் தோல்வியுற்றதற்கான பிரதான காரணம் தமிழ்கட்சிகளும்,பல இயக்கங்களின் ஒற்றுமையின்மையே காரணமாகும்.

இதனை அனைத்து கட்சிகளும்,அமைப்புக்களும், இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் ஒற்றுமை

தமிழர்களை பொறுத்தவரையில் பிரிந்து செல்லாமல் அனைவரும் ஒற்றுமைப்பட்டு தமிழ்மக்களின் நலனுக்காக தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படவேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள், அடக்குமுறைகள்,கெடுபிடிகள் அனைத்தும் இன்று ஐ.நா வரையும் ஒலித்துள்ளது. இலங்கையில் தமிழ்மக்களுக்காக தமிழ்கட்சிகள் ஒன்றுமைபடவேண்டும்.

இன்று புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அமெரிக்கா தொடக்கம் ஐ.நா மனித உரிமை பேரவை வரையும் மற்றும் உலகநாடுகளின் பலவற்றில் இலங்கைத்தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என பல போராட்டங்களை முன்னெடுத்து போராடி வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை(Photos) | Tsri Lankan Government Deceiving Tamils

உலகநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என போராடி வருகின்ற இவ்வேளையில் நம்நாட்டிலுள்ள தமிழ்கட்சிகள் அமைப்புக்கள் அனைத்தும் இதுவரையும் ஏன் ஒற்றுமைப்படாமல் இருக்கின்றது என்பது தமிழ்மக்களின் கேள்வியாக இருக்கின்றது.

தமிழ்மக்களின் நலனுக்காக தீர்மானம்

தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் தியாகத்தை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அனைத்து கட்சிகளும் தமிழ்மக்களின் நலனுக்காக ஒற்றுமைப்படவேண்டும்.

இந்த மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுகூடி தமிழ்மக்களின் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளார் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து, கட்சியின் உபதலைவர் தோழர் சர்மா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், ஆலயங்களின் தலைவர்கள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு தியாகிகளுக்கு மலர்கள் தூவி, ஈகைக்சுடர் ஏற்றி, மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தியாகிகளின் குடும்பங்களுக்கு பொன்னாடை போற்றி, தியாகிகளின் உருவப்படங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US