விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயற்சி! முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலருக்கு விளக்கமறியல்
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை விற்க முயன்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் 15 ஒழுங்கமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடித்த குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையே சந்தேகநபர்கள் விற்கமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இந்த வழக்கு தொடர்பான சமர்ப்பிப்புக்களை அடுத்த மாதம் 25ம் திகதி முன்வைப்பார் என்று குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு அறிவித்தது.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
