முஸ்லிம்களிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயற்சி! - ஹரீன்
கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைத்தீவை தெரிவு செய்ததன் மூலம் அரசாங்கம் முஸ்லிம்களிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கத்தோலிக்கர்கள் அதிகளவில் வாழும் தீவில் உடல்களை அடக்கம் செய்ய முயல்வதன் மூலம் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் குரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைக்க அரசாங்கம் முயல்கின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ முழுமையற்ற அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam