உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவு! அமைச்சரவை வழங்கிய அனுமதி
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த ஆரம்ப ஆய்வை மேற்கொள்வதற்காக தென்னாபிரிக்காவில் உள்ள சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் தென்னாபிரிக்காவிற்கு சென்றிருந்தனர்.
சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு
அந்த விஜயத்தின் போது அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி, சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் மற்றும் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை
ஸ்தாபிப்பதற்காக, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அமைச்சர் அலி சப்ரி
ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.