அச்சமின்றிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்! ஜனாதிபதி கோட்டாபயவின் உரை(Photos)
நம்பிக்கையான மற்றும் தன்னம்பிக்கை உள்ள அணியை கொண்டிருக்கும் தலைவர் ஒருவர் மற்றவர்கள் மீது கொள்ளும் நம்பிக்கை அவரது வெற்றியின் இதயமாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தனிநபர் என்ற வகையில் எவ்வளவு திறமைகள், அனுபவங்களை கொண்டிருந்தாலும் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவரால் வெற்றி பெற முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பின்னடைவு என்பது பயணத்தின் ஒரு பகுதி என்பதுடன் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அச்சமின்றி தீர்மானங்களை தலைவர் எடுக்க வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற பயிற்சிகளை முடித்துக்கொண்ட வெளியேறும் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சிறிய பணி என்றாலும் அது குறித்து கூடிய கவனத்தை செலுத்துவது மற்றும் கூட்டாக பணியாற்றும் இயலுமையை போஷிப்பது இராணுவத்தினரின் பண்பு.
தலைவர் என்ற வகையில் பயணத்தை ஆரம்பிக்கும் தமக்கு கீழ் இருப்பவர்கள் படையினர் அல்ல சாதாரண மனிதர்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியான சாதாரண மனிதர்களிடம் இருந்து திறமையான பிரதிபன்களை பெறும் விதத்தில் செயற்படுவது தலைவரின் கடமை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.