ஈரானில் இன்று மரணதண்டனை.. ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் எச்சரிக்கை
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தூக்கிலிடப்பட்டால் மிக மோசமான பதிலடி கொடுக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அந்நாட்டில் அரசாங்க எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களில் இதுவரை 2,400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 26 வயதான போராட்டக்காரர் எர்ஃபான் சோல்டானியின் உறவினர்கள், இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் எச்சரிக்கை
இந்நிலையிலேயே, ஈரானிய போராட்டக்காரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் ட்ரம்ப், அவர்கள் தூக்கிலிடப்பட்டால் மிக மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும் என கடுமையக எச்சரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மனித உரிமைகளுக்கான ஹெங்காவ் அமைப்பின் பிரதிநிதி அவியார் ஷேகி, ஈரானிய அரசாங்கம், மக்களை அடக்குவதற்கும் பயத்தை பரப்புவதற்கும் தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்துகிறது என கூறியுள்ளார்.
அதேநேரம், ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர், ஈரானியர்களை வலியுறுத்திய பின்னர், ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.