பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வெளியான அறிவிப்பு
டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் இன்று (14) அறிவித்துள்ளது.
இக்கொடுப்பனவிற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
15,000 ரூபாய் உதவித்தொகை
அரசாங்கத்தினால் ஏற்கனவே 15,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் இந்த புதிய கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி சமீபத்திய வரவுசெலவு திட்ட அறிக்கையில் அறிவித்தபடி, பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபாய் மொத்த நிதி உதவி கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.