இலங்கையில் அமெரிக்காவின் இராணுவத் தளம்! வரி குறைப்பின் பின்னணி
ட்ரம்ப் வரி குறைப்பின் மூலம் இலங்கையில் அமெரிக்காவின் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான சலுகைகளை எதிர்பார்க்கலாம் என சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சங்கத் தலைவர் தம்மிக்க பிரனாந்து தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைகாட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் வரி குறைப்பில்
மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த வரி குறைப்பு எமது நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாவதோடு ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டமை வெற்றியாகும்.
ஆனால் அமெரிக்கா புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நன்மை கருதியே செயலாற்றும். நாம் சிறிய நாடென்ற வகையில் அமெரிக்காவுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் குறைவு.
வியட்நாம் போல் எமக்கு அவர்களிடம் விமானங்கள் வாங்க முடியாது.
ட்ரம்பின் வரி குறைப்பில் நாம் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருக்கிறோம்.ஆனால் முழுமையான பயன் என்று கூற முடியாது.
இதை வைத்துக் கொண்டு நாம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தகளை செய்து கொள்ள அவசரமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




