அமெரிக்காவின் பல தசாப்த மர்மங்களுக்கு விடை காணவுள்ள ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி, அவரின் சகோதரரும் முன்னாள் சட்டத்தரணியுமான ரொபர்ட் கென்னடி மற்றும் முன்னாள் அமைச்சர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் கொலைகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் முறையே, 1963 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவில் இன்று வரை மர்மமாக உள்ள இந்தக் கொலைகளுக்கான காரணத்தை கண்டறிய மக்கள் ஆர்வமாக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மர்மக் கொலைகள்
குறித்த கொலை தொடர்பான ஆவணங்களை ட்ரம்ப் முன்வைத்த போது, எல்லா உண்மைகளும் வெளிக்கொணரப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்த மர்மக் கொலைகள் தொடர்பான ஆவணங்கள் பல தசாப்தங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
எனினும், இதுவரை கொலை தொடர்பான சந்தேகங்கள் அமெரிக்க மக்களிடையே உள்ளன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியின் கொலை தொடர்பாக பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் 35ஆவது ஜனாதிபதியான ஜோன் எப்.கென்னடி நவம்பர் 22, 1963 அன்று டெக்சாஸில் உள்ள டல்லாஸில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
கென்னடி கொலையில் உள்ள மர்மம்
தனது மனைவி மற்றும் டெக்சாஸ் ஆளுநருடன் காரில் சென்றுகொண்டிருந்த போது, அவர் சுடப்பட்டார்.
அவரை சுட்டுக்கொன்ற முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி லீ ஹார்வி ஓஸ்வால்ட், கைது செய்யப்பட்ட போதிலும், இரண்டு நாள் கழித்து இரவு விடுதி உரிமையாளர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கென்னடி கொலையில், ஓஸ்வால்ட் தனியாகச் செயற்பட்டாரா அல்லது பிற தனிநபர்கள் அல்லது குழுக்களின் சதி உள்ளதா போன்ற கேள்விகள் இன்றுவரை அமெரிக்கர்களிடம் உள்ளன.
இதில், ஏனைய நாட்டு அரசாங்கங்களின் பங்கு இருக்கக்கூடும் என பலர் நம்புகின்றனர்.
இவ்வாறான பல தசாப்த சதி கோட்பாடுகளுக்கு(Conspiracy Theories) விடை காணும் முயற்சியில் ட்ரம்ப் இறங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |