அமெரிக்க இராணுவத்திற்கு உதவும் நிதி நிறுவனங்கள் ஈரானின் நியாயமான இலக்குகள்! வெளியான இறுதி எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ நிதி ஒதுக்கீட்டிற்கு நிதியளிக்கும் நிதி நிறுவனங்கள் நியாயமான இலக்குகள்" என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
"அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் ஈரானியர்களின் இரத்தத்தில் தோய்ந்தவை. அவற்றை வாங்கினால், உங்கள் தலைமையகம் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதலையும் நீங்கள் வாங்குகிறீர்கள்," என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இறுதி எச்சரிக்கை
“உங்கள் முதலீட்டு தொகுப்புகளை (portfolios) நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்றும், “இது உங்கள் இறுதி எச்சரிக்கை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Alongside military bases, those financial entities that finance the US military budget are legitimate targets. US treasury bonds are soaked in Iranians' blood. Purchase them, and you purchase a strike on your HQ and assets.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) March 22, 2026
We monitor your portfolios. This is your final notice.
டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்காவிட்டால், அமெரிக்கா ஈரானின் மின்நிலையங்களை தாக்கும் என்று கூறிய நிலையில், அதற்கு பதிலாக, பிராந்தியத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் ஆற்றல் நிலையங்களை ஈரான் தாக்கும் என காளிபாஃப் எச்சரித்திருந்தமை அயும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri