இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரி: ட்ரம்ப் எதிர்பார்ப்பது என்ன..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பு அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரிக் குறைப்பாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு செல்வது இலங்கைக்கே ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய உற்பத்தி சார் பொருளாதாரம்
எவ்வாறாயினும், இறக்குமதிகளுக்கு அதிக வரியை விதித்து தேசிய உற்பத்தி சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பை பொறுமையுடனும் செயலாக்கத்துடனும் இலங்கை கையாள வேண்டும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
