44 சதவீத வரி விதித்த ட்ரம்ப் : வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல என்கிறார் சஜித்
இலங்கை மீதான 44 சதவீத அமெரிக்க வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 44 சதவீத வரியை விதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமெரிக்கா விதித்த வரிகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மூலோபாய மறுசீரமைப்பு
அந்தப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தடுத்தனர்.
உலகமயமாக்கல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். முதலீட்டை ஊடுருவலாகப் பார்த்தனர். அந்த மரபு முடிவுக்கு வர வேண்டும். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.
இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. சிந்தனை உணர்வுகளுக்கு மேல் கூட்டாண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வர்த்தக உத்தி
சில உள்ளூர் பங்காளிகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்தியா, ஆசியா மற்றும் பங்களாதேசுடன் ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்தியை உருவாக்க வேண்டும்.
வரிகளிலிருந்து உற்பத்தி சார்ந்த, முதலீட்டாளர் வளர்ச்சிக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏனைய நாடுகளின் பிராந்திய நலன்களை அமைதியாக மீறுவதை நாம் நிறுத்த வேண்டும்.
பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி. எதிர்த்து நிற்பது உத்தி அல்ல. முதிர்ந்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. நாமும் அதைச் செய்ய வேண்டிய நேரம் இது” என சஜித் பிரேமதாச தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
