அமெரிக்காவை ஈரானுக்கு எதிரான போருக்கு தூண்டியவர் இவர்தான்! ட்ரம்ப் கைகாட்டிய நபர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் தான் அமெரிக்காவை ஈரானுக்கு எதிரான போருக்கு தள்ளியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் ஊடகங்களுக்கு தெரிவித்தபோது, தெஹ்ரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்தவர் ஹெக்செத் தான் என்று குறிப்பிட்டார்.
ஈரானின் அரச ஊடகங்கள்
நான் பீட்டை அழைத்தேன், நான் ஜெனரல் Dan Caine-ஐ அழைத்தேன். நமது பல சிறந்த அதிகாரிகளையும் அழைத்தேன்... நாம் பேச வேண்டும். மத்திய கிழக்கில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஈரான் என்ற நாடு 47 ஆண்டுகளாக தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது.

மேலும் அவர்கள் அணு ஆயுதம் பெற மிகவும் அருகில் உள்ளனர். இதை தொடர்ந்து கொண்டே போகலாம் அல்லது ஒரு கட்டத்தில் நின்று மத்திய கிழக்கில் ஒரு நடவடிக்கை எடுத்து பெரிய பிரச்சினையை நீக்கலாம் என்று நான் கூறினேன், என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
பீட், முதலில் பேசத் தொடங்கியது நீங்கள்தான் என்று நினைக்கிறேன். அவர்கள் அணு ஆயுதம் பெற அனுமதிக்க முடியாது, அதனால் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீங்கள் கூறினீர்கள் என்று அவர் ஹெக்செத்தை நோக்கி தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து ஹெக்செத்தை பாராட்டி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார். ஆனால், ஈரானின் அரச ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன.
ஈரான் போரில் பதற்றம்
இதற்கு முன்பு, துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், வெளிநாட்டு இராணுவ தலையீட்டுக்கு எதிராக இருந்ததால், இந்தப் போருக்கு அதிக உற்சாகம் காட்டவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஊடக தொழிலதிபர் Rupert Murdoch ஈரானுக்கு எதிரான போரை ஆதரித்ததாகவும், அதே நேரத்தில் JD Vance, வெளிவிவகார செயலாளர் Marco Rubio மற்றும் தலைமை பணிப்பாளர் Susie Wiles ஆகியோர் அதற்கு எச்சரிக்கையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், தேசிய எதிர்தீவிரவாத மையத்தின் முன்னாள் தலைவர் Joe Kent, இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.
மேலும், இஸ்ரேல் அமெரிக்காவை இந்தப் போரில் ஈடுபடுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், ஈரான் போரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam